இலங்கையில் நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கிய புராதன ஆலயம் .

 

 


 காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியுள்ள ஆலயங்கள் புராதன கட்டிடங்களை மக்கள் பார்வையிட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் பகுதியில் 50 அடிக்கு நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் மேலும் நீர்மட்டம் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியுள்ள இந்து ஆலயத்தின் மேற்பகுதியை தற்பொழுது காணமுடியும் எனவும் நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.