மட்டக்களப்பு நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலய மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தும் முகமாக கணணிகள் வழங்கப்பட்டன.

 


 

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலய மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தும் முகமாக கணணிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலையின் இருபது முப்பது சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலய அதிபரினால், சமாரியனின் கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான 5 கணணிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

பாடசாலை அதிபர் பிரபாகரி ராஜகோபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற கணணி கையளிக்கும் நிகழ்வில் சமாரியனின் கரங்கள் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளரும் ஐ ட்றேன் அமைப்பின் இணைப்பாளருமான டி.ஹரிசங்கர் அதிதியாக கலந்து கொண்டு கணணிகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் சமாரியன் கரங்கள் கிழக்கு மாகாண இணைப்பாளர் வி.பிரதீப், சிவாநந்தா பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி
சங்க செயலாளர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.