பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஒவ்வொரு மாமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் உணவு பண்டங்கள் வழங்குவதிலிருந்து அனைத்துக் காரியங்களையும் ஆண்களே மேற்கொண்டு பெண்களுக்கான கௌரவத்தினை வழங்க சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.