அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா ?

 


கடந்த சில வாரங்களாக அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பல முன்னாள் அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.

தற்போதைய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக  முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், அமைச்சரவை மாற்றத்துக்கு ஏற்ற நேரம் இதுவென்றும் தகுதியான பலர் தற்போது அமைச்சு இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பது சாத்தியமில்லை என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.