கிழக்கு மாகாணத்தில் சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற, கால்களை இழந்த, மாற்றுத் திறனாளிகளுக்கு, செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.
அவுஸ்ரெலியன் அயிட் நிறவனத்தின் நிதி அனுசரனையில் சென்டர் போர் கன்
டிக்கப் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பயனாளிகளுக்கான செயற்கை
கால்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு செயற்கைக்கால் வழங்கிவைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 35 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.