நெதர்லாந்து நாட்டில் இயங்கி வரும் சிலோன் கிறிஸ்டியன் கெயார் (Ceylon Christian Care) நிறுவனத்தின் அனுசரணையில் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் நம்பிக்கையின் ஏணி (Ladder of hope) நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நம்பிக்கையின் ஏணி அமைப்பானது, மட்டக்களப்பு மாநகர சபையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், தீயணைக்கும் பிரிவுக்கு குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சிலோன் கிறிஸ்டின் கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர் பேர்ட் தலைமையிலான பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருகை தந்ததுடன், மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரூபன் மற்றும் மாநகர சபையின் தீயணைப்பு படை பிரிவினர் கலந்துகொண்டனர். (N)