இலங்கையின் ஜனரஞ்சக பெண்ணாக ஷலனி தாரகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா வனிதாபிமான 2022 விருது வழங்கல் விழா, இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தாண்டுக்கான ஜனரஞ்சக பெண் தெரிவுக்காக ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் நடிகை ஷலனி தாரகா ஜனரஞ்சக பெண்ணாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நடிகை துஷேனி மயுரங்கி, பாடகி காஞ்சனா அநுராதா, நடிகை ருவங்கி ரத்நாயக்க, கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.