தமது உறவினரான கெங்காதரன் என்பவரை நடுக்காட்டிலிருந்து மீட்கப்பட்ட முன்னாள் போராளி என சமூகவலைத்தளங்களில் சித்தரித்து, அதன் மூலம் சில தரப்புக்கள் இலாபமடைய நினைப்பதாகவும், அதனால் பாதுகாப்புப் பிரச்சினைகளை தமது குடும்பத்தினரே சுமக்க நேரிடுவதாக, மட்டக்களப்பு தாந்தாமலையைச் சேர்ந்த குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு விளக்கமளித்தனர்.