புலமை பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!










மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) திகதி சனிக்கிழமை காலை 09:30 மணியளவில் மட்/ வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்
திருமதி:சுஜாதா குலேந்திரகுமார்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர்
செல்வி:அகிலா கனகசூரியம்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக ஆரம்பக் கல்வி கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்
திரு.தி. பார்த்திபன் மற்றும்
மட்டக்களப்பு இலங்கை வங்கியின் முகாமையாளர்
திருமதி தாக்ஷாயினி பவன்,
தாபனமும் பொது முகாமைத்துவ உதவி கல்வி பணிப்பாளர்
திரு.க.ஹரிஹரராஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிகழ்வாக சுஜாதா குலேந்திரகுமார் அவர்களின் வழிகாட்டலின் நிமித்தமாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் சிறப்பு அதிதிகளால் வழங்கப்பட்டது.


அதில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மண்முனை வடக்கு அதி கூடிய 183புள்ளிகளை பெற்ற மட் /வின்சென்ட் மகளிர் பாடசாலையின் மாணவி கிருஷாயி பவேந்திரன் மற்றும் மண்முனைப்பற்று அதிகூடிய 176 புள்ளிகளை பெற்ற மட்/ஆரையம்பதி R.K.M மகா வித்தியாலயத்தின் மாணவி வேனுகுமரன் தஜானா மற்றும்
ஏறாவூர்ப்பற்று அதிகூடிய 168 புள்ளிகளை பெற்ற மட் /குடியிருப்பு கனிஷ்ட வித்யாலயத்தின் மாணவி விஜயகுமார் சாம்பவி உட்பட மூன்று மாணவிகளுக்கும் வெற்றிக் கிண்ணங்களை கொடுத்து விசேடமாக கௌரவித்து பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மொத்தமாக 381 மாணவர்கள் புலமை பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன வைக்கப்பட்டன.
மற்றும் ஐந்தாம் தர மாணவர்களால் நடனங்களும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.