சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் 55 வயதில் மேலும் 5 வருடங்களுக்கு சேவைக்கால நீடிப்பைக் கோர முடியும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.