ஏப்ரல் மாதத்துக்குரிய, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வருடா வருடம் வழங்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழமை போல வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.