"பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (08)புதன்கிழமை 4 மணியளவில் கல்வி கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி
திரு த. கணேசரத்தினம்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பிரதம விருந்தினராக
கிழக்கு பல்கலைக்கழகத்தின்
(கலாநிதி )திருமதி:
சந்திரகாந்தா மகேந்திரநாதன்
(விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்)
பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
சிறப்பு அதிதிகளாக
உப பீடாதிபதி
திரு. எஸ்.என்.ஏ. அரூஸ்
(நிர்வாகம் மற்றும் நிதி) ,
உபா பீடாதிபதி
திருமதி. டபிள்யூ. மணிவண்ணன் (கல்வி மற்றும் தர மேம்பாடு) ,
உப பீடாதிபதி
திருமதி. டி. சுந்தரராஜன்
(தொடர் கல்வி)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக பீடாதிபதி த.கணேசரத்தினம் நிறுத்து பாலினம் அடிப்படையில் ஒரு
சஞ்சிகை இதன்போது கையளிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் நாடகமாக
இணைய வழி வன்முறை ,இணைய வழி வன்முறையை நிறுத்து, இணையத்தின் ஊடாக பெண்களை நகைக்காதே என்ற துணைப் பொருளில் நாடக ஒன்று அரங்கேறியது
பெண்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல் தொடர்பான ,நாடகம், கவிதை,உணர்வுபூர்வமான தாய்மையின் பாடல், என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.