சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனில் முதல் தவணை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கப் பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரே நொசாகி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் நடைமுறைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது.
இதுதவிர இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரே நொசாகி தெரிவித்துள்ளார்.