இனப்பிரச்சினைக்கான தீர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றும் விடயமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி நிதி எங்களுடைய ஏழை மக்களின் வாழ்க்கையை வைத்தியசாலை, பாடசாலைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக கொண்டு செயற்படுவதனாலேயே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
இவ்வாறான ஊழையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில்
நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன்.
ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதே நாட்டின்
பொருளாதாரம் உச்சமடைந்து செழிப்பான நாடாக மாறும்” என்றார்.