இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

 

 


இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் அவர்களின் ஊடக சந்திப்பு  மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.  இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்........

கடந்த மாதம் 23ம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு கல்வி அமைச்சினால் இந்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஒரு விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றினை எமக்கு சமர்ப்பிப்பதாகவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் இன்று வரை இவ்வாறான ஒரு சம்பவத்தினை கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லை.

புலனாய்வு பிரிவினர் என்று சிவில் உடையில் போலீசார் சென்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இருவர்களது வீடுகளுக்கும் சென்று இவர்களை அச்சுறுத்துகின்ற வகையிலே கேள்விகளை கேட்கின்ற சந்தர்ப்பங்கள் பதிவாகி இருக்கின்றது.

இது இந்த ஜனநாயக நாட்டிலே தங்களுடைய உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுக்கின்றவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள் என்கின்றவாறு அச்சுறுத்துகின்ற வகையிலே போலீசாரனுடைய இந்த செயல்பாடு அமைந்திருக்கின்றது.

சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கே இவ்வாறான நிலைமை எனில் பாமர மகன் ஒருவர் கைது செய்யப்பட்டால் எவ்வாறான இக்கட்டான நிலைக்கு அந்த சாதாரண மக்கள் தள்ளப்பட்டு இருப்பார்கள் என்கின்ற பிரச்சனை இங்கே எழுந்திருக்கின்றது.

இந்த ஜனநாயக நாட்டிலே எமது ஜனநாயகத்திற்கு ஒரு இக்கட்டான நிலையை நிற்கின்றது.

போலீசார இவர்களை கைது செய்யப்பட்டும் நீதிமன்றத்தினால் இன்று வரை ஆஜர் செய்யப்படவுமில்லை நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக எது வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படவும் இல்லை இருந்த போதும் போலீசாரினால் இவர்களுக்கு எதிராகவும் நான்கு குற்ற செயல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதலாவது குற்றச்சாட்டு அரசு சொத்துகளுக்கு இவர்களினால் சேதம் ஏற்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டிருக்கின்றது நீதிக்கு முரணான செயற்பாட்டினை வீடியோ எடுப்பது அரச சொத்தை சேதப்படுத்தும் செயற்பாடா என்கின்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

அடுத்ததாக மக்களுக்கு தவறான ஒரு குழுவிலே இவர்கள் இருக்கின்றார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது தொழிற்சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு கல்வி அமைச்சரின் செயலாளரினால் அழைக்கப்பட்டு கல்வி அமைச்சர் உடைய செயலாளரின் கீழே செயல்படுகின்ற பலர் இருந்தும் அந்தக் குழுவினை மக்களுக்கு முரணான குழுவாக இவர்கள் சித்தரிப்பார்கள்.

பாரிய மிரட்டல்களை செய்வதாகவும் இவர்களுக்கு எதிராக குற்ற செயல்களை முன் வைத்திருக்கின்றார்கள், அடுத்ததாக போலீசாரின் தடுப்புகளையும் மீறி இவர்கள் உள்நெறிந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இவர்கள் செய்யப் போகின்ற விடயம் தான் என்ன? இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு போலீசாருக்கு யார் அனுமதி கொடுத்தது?

இன்று போலீசாரினால் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்ற பொழுது சிவில் ஆடை அணிந்த போலீசாரினால் தொடர்ச்சியாக இவர்கள் அச்சுறுத்தப்படுகின்ற செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கும் இலங்கை யாப்பிற்கும் முரணான செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம்.