மட்டக்களப்பு சைவமங்கையர் கழகமானது கடந்த இரண்டரை வருடமாக
ஆரம்பிக்கப்பட்டு சமயப்பணியையும் சமூகப்பணியையும் சிறப்பாக செய்து
வருகின்றது. அந்த வகையிலே இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
சைவமங்கையர் கழகத் தலைவி திருமதி.திலகவதி ஹரிதாஸ் ஒய்வுநிலை அதிபர்
தலைமையின் கீழ் துளசி மண்டபத்தில் மகளிர் தின விழா பி.ப 3.30 மணிக்கு
கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்தா
அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக பணிப்பாளர் திருமதி.
கலாநிதி பாரதி புளொரன்ஸ் கெனடி அம்மணி அவர்களும்ää கௌரவ அதிதியாக
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் மைதிலி பாத்லட் அவர்களும் பங்குபற்றினார்கள்.
மகளிர்
தின சொற்பொழிவு இடம் பெற்றதுடன், கல்லடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய்
வரையுள்ள மங்கையர்கள் பலரும் அவர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி
செய்வதற்காக சுயதொழில் வழிகாட்டல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக
திருமணப் பெண்களின் தையல் அலங்கார வேலையான ஆரிவேக் உம் அளவெடுத்து
விளவுஸ் கட்டிங் தைப்பதற்கு பழக்கும்
பயிற்சியும், பப்படம், மோர்மிளகாய் தயாரிப்பதற்கான பயிற்சியும்
ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு வளவாளர்களாக முறையே திருமதி.மலர்விழி லோகேந்திரராஜா ஒய்வு நிலை ஆசிரியர் அவர்களும்
திருமதி உமா சக்திவேல் அவர்களும் கலந்து பயிற்சி அளிக்கும்
வேலைத்திட்டத்தில் இணைந்து இன்று ஆரம்பித்து வைத்தனர். இதனால் இப்பிரதேசப் பெண்கள்
பலர்
வீட்டில் இருந்து கொண்டே பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கக்கூடிய
செயற்பாட்டிற்கு அடிகோலப்பட்டுள்ளது. கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீசித்தி
விநாயகர் ,
பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபையினரும் உதவி நல்க முன்வந்துள்ளனர்.