பண்டாரவளை பிரதேசத்தில் மண் சரிவு .

 

 


பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது,

இதேவேளை, பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்போரை அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.