அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 6 வாகனங்களை திருத்துவதற்கு தேவையான நிதிப்பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் Land Kusher வகை V8 (V8), Land Rover, Micro, Tata ஆகிய வாகனங்கள் அமைச்சு வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகனங்கள் கடந்த 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய அதிகளவில் பணம் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாகனங்களை கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருத்தினால் ஏனைய வாகனங்களை திருத்துவதற்கு பணம் இருக்காது என அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக டெண்டர் நடைமுறையை பின்பற்றி அந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.