உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என்று குழு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மறுக்கமுடியாத ஜனநாயகமற்றது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறுவதாகும் செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.