சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்களின் வளர்ச்சி கிராமத்தின் எழுச்சி" எனும் தொனிப்பொருளில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார திட்ட பயனாளிகளின் தயாரிப்புக்கள் கண்காட்சியும், விற்பனையும் இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளினால் சந்தை பகுதி திறந்து வைக்கப்பட்டு உற்பத்திப் பொருள் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாம் பவுன்டேசனின் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,சிரேஸ்ட பொதுசுகாதார உத்தியோகத்தர் , பொதுசுகாதார பரிசோதகர், பாடசாலை அதிபர்கள், கூட்டுறவுசங்க முகாமையாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் , வங்கி முகாமையாளர்கள் , மருத்துவ உதவிதாதியர் கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் அமைப்பினர், மாதர் சங்கங்கஉறுப்பினர் , பாம் பவுன்டேசன் நிறைவேற்றுப் பணிப்பாளர் , மற்றும் உத்தியோகத்தர்கள், வாழ்வாதார பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.