(கனகராசா சரவணன்)
மயிலத்தைமடு மேச்சல் தரை என்பதை தாண்டி எமது மண்ணுக்கான போராட்டம் அது நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட இனபரம்பலாக்கல் அதனைவிடுத்து பாராளுமன்றத்தில் இருக்கம் தமிழர் பிரதிநிதித்துவத்தை உடைத்தெறிவதற்கான வேலைத்திட்டத்திற்கான சதி முயற்சி எனவே இந்த பிரச்சனை முடிக்கவேண்டும் என அரசியல்வாதிகள் இதய சுத்தியுடன் கவனம் எடுக்கவில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை 9110 இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்பாடு என்பது ஒரு பணம் உழைக்கின்ற குழு எனவே மட்டக்களப்பு மயிலத்தைமடு மேச்சல் தரை விவகாரம் பார்க்க எமது மாவட்ட அமைச்சர்களுக்கு நேரமில்லை ஏன்என்றால் கைகட்டி வாங்கி கொண்ட அமைச்சு பதவிகளை தக்கவைக்க வேண்;டுமாக இருந்தால் மேச்சல் தரையை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது
எனவே மேச்சல் தரை விவகாரம் தொடர்பாக சில அரசியல் வாதிகள் தங்கள் கூறுகின்ற விடையம் மீடியாவுக்கு வரவேண்டும் என செயற்படுகின்றனரே தவிர முடிவு இல்லை அந்த விடையத்தை தெளிவுபடுத்த வேண்டும். உதாரணமாக பயங்கரவா தடைச்சட்டத்திற்கு எதிராக வாங்கிய கையொழுத்து இன்னம் கொடுக்கப்படவில்லை இது போன்ற செயற்பாடுகள் நடக்கின்றதே தவிர இந்த பிரச்சனைக்கு முடிவு இல்லை முடிக்கவேண்டும் என அரசியல்வாதிகளும் கவனம் எடுக்கவில்லை என்பதுடன்.
எமது மாவடடத்தில் அமைச்சு பதவிகளை கைகட்டி வாங்கி கொண்டவர்கள் தமது அமைச்சு பதவிகளை தக்கவைக் வேண்;டுமாக இருந்தால் மேச்சல் தரையை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும் இது அவர்களது நிலைப்பாடாக உள்ளது எனவே மக்கள் போராட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டரின் முயற்சி என்பன காலப் போக்கில் நிச்சயமாக வெற்றியளிக்கும்.
அதேவேளை உள்ளூராட்சி தேர்தல் சட்டப்படி நடாத்தப்பட வேண்டியது தர்மப்படி நிறுத்தி வைக்க வேண்டியது இது தான் உண்மையான விடையம் அதேவேளை இந்த தேர்தல் சில அரசியல் கட்சிகளுக்குதான் தேவையாக இருக்கின்றதே தவிர மக்களுக்கு தேவை இல்லை.
நாட்டின் இறுக்கமான பொருளாதார நிலையிலே சமுர்த்தி வழங்குவதில் சம்பளம் வழங்குவதில் பிரச்சனை இருக்கின்றதுடன் மருந்து தட்டுப்பாடு இருக்கின்ற நிலையை அறிந்தும் கூட அரசியல்வாதிகள் தேர்தலை நாடி நிற்பது மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் யார் தலை உறுண்டாலும் பரவாயில்லை நாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கின்ற அதிகார வெறியின் வெளிப்பாடுதான் இது.
காணிவிடையத்தில் காழ்புணர்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் முடிந்தவரை தமிழர்கள் இருக்கின்ற காணிகளை கையகப்படுத்துங்கள் அது யாராக இருந்தாலும் தமிழர்கள் கையகப்படுத்துவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை அதேவேளை இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கும் இடம் கொடுங்கள் அதாவது நிலம் குத்தகையாக இருக்கட்டும் பொமிற்றாக இருக்கட்டும்.
5 வருடங்களின் பின்னர் தமிழர்களின் நிலை எப்படி இருக்க போகின்றது என தெரியாது எனவே நிலத்தை தக்கவைப்பதிலே எல்லோரும் முயற்சியாக இருங்கள் பிள்ளையான் குத்தகைக்கு எடுத்தார் அவர் எடுத்தார் என தெரிவிக்கலாம் குத்தகைக்கு யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் முடிந்தவர்கள் அரசாங்க நிலமாக இருந்தாலும் நீங்கள் தொழில் செய்வதற்கு குத்தகைக்கு வாங்குங்கள் இருப்பதற்கு இடமில்லாதவர்கள் அரச காணியாக இருந்தாலும் கையகப்படுத்துங்கள்
அண்மை காலமாக நசீர் அகமட் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்பு கிழக்கு மாகாணத்தில் மண் அகழ்வு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதில் இன ரீதியான பாகுபாடு நடப்பதாக இது சாந்தவர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளர் எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு வெள்ளிக்கிழமை (10) தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது விமான நிலையத்தில் என்னை சந்தித்த வேளை கிழக்கு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கனகசிங்கம் பதிவாளர் பகிரதன் ஆகியோரை அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டபோது கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிப்பதற்கும் இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைகாலத்தையும் விதைப்பு காலத்தையும் கருத்தில் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு தொடர்பாகவும் தேவையான நேரத்தில்உரங்கள் வழங்கப்படுவதில்லை போன்ற விவசாயிகளின் பிரச்சனைகள்
மற்றும் இடை நடுவிலே நிறுதிவைக்கப்பட்டுள்ள ஒரு இலச்சம் வீதி வேலைத்திட்டத்தில் இருக்கின்ற பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்த வீதிகள் புனரமைக்க வேண்டும் எனவும் நகர மயமாக்கல் திட்டத்தில் செங்கலடி உள்வாங்க வேண்டும் என கவனத்திற்கு கொண்டுவந்தபோது அவைகளை செய்துதருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என அவர் தெரிவித்தார்