நாட்டை மீண்டெழச் செய்வதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது வரலாற்று மாற்றம்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 


 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சட்டப்படி அனுமதி தேவையில்லாத போதிலும் அதனை பெறவுள்ளதாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் வியாழக்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் கடனில் மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தை நாடு அமுல்படுதுமா? இல்லையா? என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த அவர்,  கடனை கட்டவேண்டுமாயின் வீட்டிலிருக்கும் ஒரு பொருளை விற்றே ஆகவேண்டும் என்றார். 

எல்லா பங்கங்களிலும் தவறுகள் உள்ளன. அவற்றை திருத்திக்கொண்டு இணைந்து உதவுங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி பழைய விளையாட்டை விளையாட முடியாது. பல திட்டங்களை எதிர்த்தவர்கள் எம்மோடு இருக்கின்றனர் என்றால் நல்லதுதானே என்றார். 

அரசாங்கத்தி செலவை குறைக்கவேண்டும் வருமானத்தை அதிகரிக்கவேண்டும் அத்துடன் பணவீக்கத்தை குறைக்கவேண்டும். நாட்டை மீண்டெழச் செய்வதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது வரலாற்று மாற்றம் என்றார்.