விகாரைக்கு வழிபாட்டுக்கு சென்ற சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவர், உறவினர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் ஹெட்டிப்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களே,இந்த மத குருவை தாக்கியுள்ளனர்.
இதில்,காயமடைந்த மத குரு,குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
ஹெட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில், இம்மத குரு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹெட்டிப்பொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..