டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது .

 


டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க தேவையான துறைகளுக்கு செலவிடுவதற்கு போதுமான  அளவு டொலர் எம் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என கருதப்படும் இலங்கைக்கான நிதி உதவி கிடைத்த பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் இதன் காரணமாக மேலும் நிதியும் முதலீடும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.