தேர்தல் நடத்தப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர் என்றும் சில கட்சிகள் மற்றும் தனிநபர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை தாங்கள் பாரிய கூட்டணியாக எதிர்கொள்வோம் என்று குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர், ஜனாதிபதி ரணிலின் பாதையை பின்பற்றுகின்றனர் என்றும் சிலர் எதிர்காலத்தில் சேர்ந்து பயணிப்பர் என்றும் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலை தாங்கள் பாரிய கூட்டணியாக எதிர்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவர் என்றும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியை மக்கள் எளிதாகத் தெரிவு செய்வர் என்றார்.