பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் ஒப்பீட்டளவில் ஸ்தீரமடைந்துள்ளது. ஆகவே, இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.