காணாமல் போனோர் விளம்பரத்தை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்ய முயலாதீர்கள், நான் ஒரு நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது என சர்வ மக்கள் கட்சியின் தலைவி ரீ.உதயகலா இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல்போனோரை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர், அரசினால் அவர்களுக்கு நஸ்ட ஈடு கொடுக்க அரசாங்கம் முற்பட்டால் அதை பெறுவதற்கு விடாமல் தடுக்கும் அதோ அரசியல்வாதிகள் கட்டும் கோமணம் கூட ஏதோ ஒரு வகையில் அது அரச சொத்தாகத்தான் இருக்கும்.
அரச பாதுகாப்புடன்தான் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த அரசியல்வாதிகள் வருகின்றார்கள் இவர்களுக்கு வெட்கமில்லையா இவ்வாறு அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றி புழைப்பு நடத்த, நான் மக்களுக்காக பாராளுமன்றம் சென்றால் நிச்சயமாக அந்த சம்பளத்தை நான் பெறமாட்டேன்.
இவர்கள் எத்தனை ஆர்பாட்டங்களை செய்தாலும் இவர்களால் இந்த நாட்டை சீரழிக்க எந்தவகையிலும் முடியாது. ஐனாதிபதி ரணில் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுசெல்வார். அத்தோடு இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரம சிங்கவிற்கே வாக்களித்து மீண்டும் அவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் இதுவே உறுதி என்றார்.