மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கமநல அமைப்பு விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்று சோலர் செயற்றிட்டத்திற்காக கையகப்படுத்த முயற்சிக்கின்றது என குறிப்பிட்டே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
எங்கள் வயல் காணிகளை அபகரிக்காதே , விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே,
சோலர் பவர் எமக்கு வேண்டாம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் ஜெகநாத்திடம், சாப்பமடு கமநல அமைப்பு விவசாயிகளினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.