அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான போராட்டங்கள் அல்லது நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் இனங்கண்டு, அவர்கள் பற்றிய பதிவேடுகளை தயாரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கைகள் தரவு வங்கி வடிவத்தில் பராமரிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, குறித்த நபர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்கள் என ஆவணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றன.
அரச அல்லது தனியார் துறை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பொலிஸ் மற்றும் கிராம அலுவலர் அறிக்கைகளைப் பெறுவது சாதாரண நடைமுறையாகும்.
இருப்பினும் பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது இது வரையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவில்லை எனவும், இனிமேல் அது விசேட தகுதியாக தீர்மானிக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.