மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!!

 

 
ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர தலைமையில்  (21) திகதி இடம்பெற்றது.
நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்காக உயிர் நீத்த முப்படை வீரர்கள், காணாமல் போன, மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் நிர்வாக தேவையினை இலகு படுத்தும் முகமாக ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் முப்படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிர்வாக சேவைகளை அவர்களின் இடத்திற்கே சென்று அவர்களுடைய தேவைகள், பிரைச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சேவையை வழங்குவதற்காக முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகியவற்றின் தலைமை காரியாலயங்களின் உயரதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
இதன் போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான உபகரணங்கள், வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தனி நபர் கடன் வசதி, வியாபார கடன், தொழில் முயற்சி கடன், பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள், வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது ரணவீரு சேவா அதிகாரசபை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கித்ஸ்ரீ ஏக்கநாயக்க, பிரிகேடியர் ரொஷான் திரிமான, கிழக்கு மாகாண ரணவீரு சேவா அதிகாரசபை உதவி பணிப்பாளர் டபிள்யு.டி.ஹேமச்சந்திர குணதாச, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர்கள் கே.மதிவண்ணன், காணி உத்தியோகத்தர் திருமதி.ஈஸ்பரன் உற்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.