]மட்டக்களப்பு கல்லடி விமோசனா இல்லம். மரூபா குழுவினர். மற்றும் ஏ.ஏ (அல்க்ககோலிக்ஸ்.அனோனிமஸ்). குழுவினரும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கண்காட்சி சைக்கிள் ஓட்ட பவனியானது இம்மாதம் 17ம் திகதி ஜாலயில் தொடங்கி 19 ம் திகதி மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தில் நிறைவடைந்தது. மூன்று நாட்களை கொண்ட இப்பவனியானது.மது, மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்டெழுந்து நீண்ட காலமாக குணமடைந்தவர்களால். நிகழ்த்தப்பட்டது..
இன்று காலையில் புனானையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு. ஓட்டமாவடி, வாழைச்சேனை ஊடாக மட்டக்களப்பை வந்தடைந்து.விமோச்சனா இல்லத்தில் அந்நிகழ்ச்சி நினைத்தவுடன். இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்களாலும்.மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை சாரண மாணவர்கள் மற்றும் சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மாணவர்களும் இணைந்து மாபெரும் . சுமார் 50அடிக்கம் மேல் நீளமுள்ள தேசிய கொடியை பறக்க விடும் நிகழ்வும் இடம்பெற்றது... அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு கல்லடி விமோச்சனா இல்லத்தில் மாணவர்களையும்.. சைக்கிள் ஓட்ட குழுவினரையும் கொளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்.. திருமதி கலாமதி பத்மராஜா அவர்களும்.கொளரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் அவர்களும் விசேட விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களும்.மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் திரு நல்லையா பிரபாகரன் அவர்களும் மற்றும் உளவளத்துறை வைத்தியர்கள்.. துறைசார் நிபுணர்கள்.. பொதுமக்கள். பயனாளர்கள்.. மாணவர்கள். பெற்றோர்கள்.நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்..
அதிதிகள் தங்கள் உரையில் 13 வருடங்களாக. மது.மற்றும் போதை பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபடும் கல்லடி விமோச்சனா இல்லத்தின் சேவைகளை பாராட்டி பேசியது டன். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்தினர்..
இறுதியில் சைக்கிள் ஓட்ட பவனியில் பங்கு பற்றிய வர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன்.நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.