மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!







































மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில்  இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் முகாமையாளர் டிலுக்சாந் தலைமையில் ஒழுங்க செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி சம்பத் கன்னங்கர
கலந்து கொண்டார்.
மற்றும் சிறப்பு அதிதியாக இந்த பல்கலைக்கழகத்தின் CEO சந்திரமோகன் சந்திரசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் 05 டிப்ளோமா கற்கை நெறிகளான Diploma in Business Administration, Diploma in Human Resource Management, Diploma in Information and Communication Technology, Diploma in English மற்றும் Diploma in Psychology and Counseling ஆகிய பாட நெறிகளில் தோற்றி வெற்றிகரமாக பூர்த்திசெய்த சுமார் 169 மாணவர்களுக்கு சான்றிதழ்வழங்கி வைக்கப்பட்டதுடன் இப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களையும் கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்களினால் கலை நிகழ்வுகள், குழு பாடல், நடனங்கள் என இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.