" Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது.

 


இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள " Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

தேர்வில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

 இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

" Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டியில் 75இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்முறை இந்த அழகிப் போட்டி இலங்கையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.