மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த இராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
2021-ம் ஆண்டு பெப்ரவரியில் ஆட்சியைப் பிடித்த பிறகு எதிர்ப்பாளர்கள் மீது இராணுவ ஆட்சியாளர்கள் விமான தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் வொல்கர் துர்க், சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் அச்சமூட்டுவதாக இருப்பதாக கூறியுள்ளார்.