கை விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

 


எகிப்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கை விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவரே கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்த வெளி நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற ஷேகப் அல்லாம் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு நீந்தும் போது உதவி படகுகள் தன்னை பின் தொடர மறுத்துவிட்டார்.