தந்தை செல்வநாயகத்தின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில்,தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.சிறிநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் வடகிழக்கு தலைவர் கி.சேயோன், முன்னாள் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மௌனவணக்கம் செலுத்தப்பட்டது, தந்தை செல்வா ஞாபார்த்த உரைகளும் நடைபெற்றன.