மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹித்தெட்டிய, பெந்தோட்டகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஹித்தெட்டிய தர்மராஜா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் மேலும் இரு நண்பர்களுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.R