சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் தப்போது சென்றது தவறு என்றால் இதற்கு முன்னர் 16 தடவைகள் சென்றதும் தவறுதான் எனத்தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த , சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல. என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப். ) உடன்படிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல.
அவ்வாறு எண்ணிக்கொண்டே பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய
நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகளில் பெருமளவு நாடுகள் அதில்
அங்கத்துவம் வகிக்கின்றன. அது ஒரு நிதியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள
வேண்டும்.அந்த நிதியத்தின் பெரும் பகுதியை அமெரிக்கா கொண்டுள்ளது. அதற்கு
அடுத்ததாக ஜப்பான், சீனா போன்ற நாடுகள் உள்ளன.
சீனாவிடமும் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான இருதரப்பு கடனை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். அது பிரத்தியேகமானது. அவ்வாறு பெருமளவு நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் நிதியத்திடமே எமது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாம் கடன் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளோம் என்றார்.