, 16 பாடசாலைகள் இருந்து வெளியேற்றபிப்பட்ட ஆசிரியர் ஒருவரை வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு நியமனம் வழங்கிமைக்கு எதிப்பு .

 


மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள பொ.உதயரூபன் என்கின்ற ஆசிரியரின் நியமனத்தை இரத்துச் செய்யக் கோரி,
கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

குறித்த ஆசிரியரை, 16 பாடசாலைகள் வெளியேற்றியுள்ள நிலையில், அவர் வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பாடசாலை நிர்வாகத்திடம் பழைய மாணவர்கள் கையளித்தனர்.