இரத்த தானம் வழங்கும் நிகழ்வு- மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு- 2023.04.08













(ஆர்.நிரோசன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை போக்கும் நோக்கொடு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு(08)சனிக்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கணிஷ்ட வித்யாலயத்தில் நடைபெற்றது.

காந்தி மற்றும் சக்தி விளையாட்டு கழகங்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் பின்பு இரத்தம் வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு 6 மாத கால இடைவெளியில் நடாத்தவள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர்கள் தெரிவித்தனர்
வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.

மற்றும் 50 க்கு மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.