மட்டக்களப்பு கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினரின் வட்டார விளையாட்டு போட்டி கல்லடி விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .
இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
காலையில் மரதன் ஓட்டப்போட்டி , மற்றும் தோணி ஓட்டப்போட்டி ஆகியன இடம் பெற்றன . மாலையில் பலவகையான விளையாட்டுகள் நடை பெற்றன .
விளையாட்டு போட்டிகள் இரவு வரை நீடித்திருந்தது.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் பெறுமதியான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள் .