தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் - 2023

 







கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி,விற்பனை சந்தையானதுபிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜெ.ஏப். மனோகிதராஜ் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பினை வழங்கினர்.
வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தை நிகழ்விற்கு அனுசரணையை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் கோறளைப்பற்று வாழைச்சேனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச மக்களின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் வகையில் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டதுடன், இவ் விற்பனை சந்தையானது பிரதேச சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையப்பெற்றது சிறப்பம்சமாகும்.