மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட உள்ளூர் பொருட்களுக்கான கண்காட்சி அண்மையில் சீலாமுனை இளம் நட்சத்திர மைதானத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் தைத்த ஆடைகள், உணவு வகைகள், மரக்கன்றுகள், பாதணிகள், கைப்பணிப்பொருட்கள், பனையோலை உற்பத்தி கள் போன்ற உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட விற்பனையாளர்களுக்கு தமது உற்பத்திகளை விற்பனை செய்தமையை அவதானிக்க முடிந்தது.
இந்நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், சமுர்த்தி முகாமை பணிப்பாளர், சமுர்த்தி திட்ட முகாமையாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.