"வசத் சிரிய - 2023" சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு சங்கிரீலா திடலில் இன்று (22) வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை இணைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
புத்தாண்டு விழா நடைபெறும் இடத்திற்கு இன்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்த மக்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
அத்துடன், கிராம வீடு மற்றும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அவற்றை அவதானித்ததுடன், அங்கிருந்த வெளிநாட்டவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலையும் மேற்கொண்டார்.