மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 2023.

 




 
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும், பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.