பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தவணை விடுமுறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் விடுமுறை கால அட்டவணை வெளியாக வில்லை. இந்த நிலையில் குறித்த அட்டவணை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடைநிலை வகுப்புகளுக்கான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய சுற்றறிக்கையையும் கல்வி அமைச்சு இதனுடன் வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.