30 வயதான தாயே ஆண் சிசுக்கள் மூன்றையும் பெண் சிசுவையும் பெற்றெடுத்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருணாகல், தோரயாய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான தாயே இவ்வாறு நான்கு சிசுக்களையும் பெற்றெடுத்துள்ளார்.
சிசுக்களின் தாய், பாடசாலை ஆசிரியை என்பதுடன், வல்லவபிட்டிய பிரதேச செயலாளர் காரியாலயத்தின் அபிவிருத்தி அதிகாரியாக தந்தை பணியாற்றுகின்றார்.
நான்கு சிசுக்களும் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் தாய் நலமுடன் இருப்பதாகவும், சுமார் 10 நிமிட இடைவெளியில் சிசேரியன் மூலம் குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சம்பத் ஞானரத்ன தெரிவித்தார்.