குடும்பத் தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 4 பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளார் என திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான லெச்சுமனன் நிஷாந்தனி (வயது 34) என்பவரே டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.
குடும்ப தகராறு தொடர்பாக இரண்டு குழந்தைகளுடன் திம்புல பத்தன பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த தாய் தனது குழந்தை ஒருவருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுய்யார்.
பின்னர் தாயுடன் சென்ற குழந்தை மீண்டும் பொலிஸாரிடம் ஓடிச்சென்று தாயார் அருவியில் இருந்து கீழே குதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தாயின் சடலத்தை கண்டுபிடிப்பதற்காக திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.