மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி பக்தர்களுக்கு இடையூறு செய்த கபில யானை.

 


 

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவுப் பொருட்களையும் அபகரித்துள்ளது.

யானையின் தாக்குதலால் பேருந்தில் வந்த 30 பக்தர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்துல்பாவ காவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

 கபில என்ற இந்த யானை கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை இவ்வாறு தாக்கி துன்புறுத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சித்துல் பவ்வ விகாரையின் தலைவர் நஹிமியோ தெரிவித்தார்.

இந்த யானையை இந்த பகுதியில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை அது பலனளிக்கவில்லை.

 கதிர்காமத்தில் இருந்து யால காடுகளுக்கு நடுவில் உள்ள சிதுல்பாவ கோவிலுக்கு சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் கதிர்கமுவ கல் வாங்குவ பகுதியில் வைத்து கபில என்ற இந்த யானை யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் தாக்குதலால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி, இருபுறமும் உள்ள கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் உள்ளேயும், மேற்கூரையிலும் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், பைகள் அனைத்தும் கீழே சிதறி கிடக்க காணப்பட்டது.