கடலில் மிதந்து வந்த 6 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான போதை பொருட்கள் மீட்பு .


 

 

 தலைமன்னாரை அண்டிய கடற்பகுதியில் நேற்று (02) ​​4 கிலோகிராம் நிறையுடைய (ஈரத்துடனான எடை) ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையில் தலைமன்னாரை அண்டிய கடலில் மிதந்துவந்த பையொன்று அவதானிக்கப்பட்டது.

அந்தப் பையை சோதனையிட்டபோது அதிலிருந்த நான்கு பொதிகளிலிருந்து 4.5 கிலோகிராம் (ஈரமான எடை) நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இவற்றின் பெறுமதி சுமார் 6 கோடியே 75 இலட்சம் ரூபா என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.